Shruti Haasan : நடிகை சுருதிஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு தான் பிசிஓஎஸ் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன், சினிமாவில் நாயகி, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சுருதிஹாசன் தற்போது பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 107-வது படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் சுருதிஹாசன்.
இதையும் படியுங்கள்... வாடகை வீடு தான்... யாருக்கும் காட்டுனதில்ல - 11 வருஷமா வாழ்ந்து வரும் வீட்டை முதன்முறையாக காட்டிய ஜூலி
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு தான் பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான செய்திகள் பரவத் தொடங்கின.
இதையும் படியுங்கள்... பாட்டி வயதிலும் பளீச் வெட்கம்... 80 வயது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படத்தை பகிர்ந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!
இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுருதிஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: “கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டு பிசிஓஎஸ் பற்றி பேசி இருந்தேன். நிறைய பெண்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. ஆமாம் இது சவாலானது தான். ஆனால் இதனால் நான் நலமின்றி இருப்பதாக அர்த்தமில்லை. என உடல்நிலை மோசமாகவும் இல்லை.
இதையும் படியுங்கள்... துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... கொலைவெறி தாக்குதல்!! போலீசில் பரபரப்பு புகார்!!
Stay healthy... god bless u. Nothing else we wanted to knw. U r a talented actress. Get bk frm everything . Just we can give moral support to u pic.twitter.com/8CBntXpRUw
— A. JOHN- PRO (@johnmediamanagr)நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால் இது வேறுவிதமாக சென்றுவிட்டது. மருத்துவமனையில் இருக்கிறீர்களா என்று என்னிடம் நிறையபேர் கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. நான் நலமாகவே உள்ளேன். பிசிஓஎஸ் பிரச்சினை எனக்கு பல ஆண்டுகளாக உள்ளது. இருந்தாலும் நான் நலமுடன் உள்ளேன்.” என கூறி உள்ளார்.