வாணி போஜன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்!!

By manimegalai a  |  First Published Jul 5, 2022, 7:25 PM IST

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் நடித்திருக்கும்  “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். 
 


மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் நடித்திருக்கும்  “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். 

ஒரே இரவில், ஒரு கட்டிடத்திற்குள்  நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, பரபரப்பான திரில்லராக  உருவாகியுள்ளது இப்படம்.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைத்துள்ளனர் படக்குழுவினர். ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தை தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த புதுமையான ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!
 

மேலும் இப்படம் முழுக்க முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், ‘எரும சாணி’ அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்: துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... கொலைவெறி தாக்குதல்!! போலீசில் பரபரப்பு புகார்!!
 

இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளதோடு படத்தொகுப்பும் செய்துள்ளார்மார்க் ஜோயல்,  விக்னேஷ் J.K ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு , தினேஷ் நாகராஜன் & ஸ்டான்லி சேவியர் இசையமைத்துள்ளார்.  'கேசினோ' என வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படு பிஸியான வேலைகளுக்கு இடையே, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். படத்தின்  டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதே நேரம் இந்த படத்தில் வாணி போஜன் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் நடித்திருக்கும்  “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். 
 

click me!