T Rajendar : நடிகர்கள் நெப்போலியன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நியூயார்க்கில் டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளனர்.
தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்தவர் டி.ஆர். இவர் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, இசை, பாடகர் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். தற்போது இவரைப் போலவே இவரது மகன் சிம்புவும் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... அக்கா ரம்யாலாம் சும்மா... நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறி கவர்ச்சி காட்டிய கீர்த்தி ! குளுகுளு கிளிக்!
சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து டி.ஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட சிம்பு அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இதையும் படியுங்கள்... பாட்டி வயதிலும் பளீச் வெட்கம்... 80 வயது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படத்தை பகிர்ந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற டி.ராஜேந்தருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து ஓய்வெடுத்து வந்த அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்பு தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
இதையும் படியுங்கள்... 4 வது நாளில் 'யானை' பாக்ஸ் ஆபிஸ் வசூல்..எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், நடிகர்கள் நெப்போலியன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நியூயார்க்கில் டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளனர். அப்போது தனது நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமடைந்த டி.ஆர்., அடுக்குத்தமிழில் பேசி அவர்கள் இருவரையும் அசர வைத்தார். நடிகர் நெப்போலியன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகிறது.