
தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடும்படியான பல்வேறு படைப்புகளை கொடுத்தவர் மணிரத்னம். தற்போது இவர் தனது கனவுப் படமான பொன்னியின் செல்வனை எடுத்து முடித்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்ட இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயராம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... கமல் மகளுக்கு என்னாச்சு...! உடல்நலம் குறித்து பரவிய தகவல்... பதறிப்போய் வீடியோ மூலம் விளக்கமளித்த சுருதிஹாசன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. அதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை தற்போதே படக்குழு தொடங்கிவிட்டது. அதன்படி கடந்த சில தினங்களாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களுடன் கூடிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்... வாடகை வீடு தான்... யாருக்கும் காட்டுனதில்ல - 11 வருஷமா வாழ்ந்து வரும் வீட்டை முதன்முறையாக காட்டிய ஜூலி
அந்த வகையில் முதலாவதாக நடிகர் விக்ரம் இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடிப்பதாக குறிப்பிட்டு அவர் குதிரை மேல் அமர்ந்தபடி இருக்கும் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். அடுத்ததாக நடிகர் கார்த்தி இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ளதாக குறிப்பிட்டு நேற்று சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் எடிட்டர் கவுதம் ராஜு காலமானார்
அந்த வகையில் இன்று நடிகர் ஜெயம்ரவியின் கேரக்டர் அடங்கிய போஸ்டர் வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். படத்தின் கதைப்படி பெரிய பழுவேட்டரையாரின் மனைவி தான் நந்தினி. இப்படத்தில் பெரிய பழுவேட்டரையாராக சரத்குமார் நடித்துள்ளார். இதன்மூலம் நடிகை ஐஸ்வர்யா ராய், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளது உறுதியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.