மிரட்டும் கொரோனா... தடபுடலாக நடக்கவிருந்த திருமணத்திற்கு தடை போட்ட பிரபல நடிகர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 26, 2020, 03:07 PM IST
மிரட்டும் கொரோனா...  தடபுடலாக நடக்கவிருந்த திருமணத்திற்கு தடை போட்ட பிரபல நடிகர்...!

சுருக்கம்

இதனால் நிதின் தனது திருமண திட்டத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வருபவர் நிதின். இவர் டோலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகன். தெலுங்கில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் தான் தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமானார். 

இதையும் படிங்க: கொரோனாவின் கோர தாண்டவம்... குவியும் சவப்பெட்டிகளால் திணறும் இத்தாலி... எங்கு திரும்பினும் மரண ஓலம்.....!

நிதினின் முதல் படமே சூப்பர் ஹிட், அதைடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. சமீபத்தில் வெங்கு குடுமுலா இயக்கத்தில் நிதின் நடித்த பீஷ்மா என்ற காமெடி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். 

தொடர் வெற்றிகளை ருசித்து வந்த நிதின் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி என்பவரை கரம் பிடிக்க முடிவு செய்தார். இவர்களது நிச்சயதார்த்தம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த மாதம் 15 மற்றும்  16 தேதிகளில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெறவிருந்தது. 

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

இந்நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸில் இருந்து இந்திய மக்களை பாதுகாப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: ப்பா என்னா இடுப்பு... ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்...அந்த இடம் தெரிய பளீச் போஸ்...!

இதனால் நிதின் தனது திருமண திட்டத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயில் தடபுடலாக நடக்கவிருந்த திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் சிம்பிளாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!