என்ன திட்டாதீங்கப்பா... முடியில... அது வெறும் நடிப்புப்பா...! கதறிய நடிகர் நட்டி நட்ராஜ்!

Published : Apr 13, 2021, 12:34 PM IST
என்ன திட்டாதீங்கப்பா... முடியில... அது வெறும் நடிப்புப்பா...! கதறிய நடிகர் நட்டி நட்ராஜ்!

சுருக்கம்

கடந்த வாரம் வெளியான 'கர்ணன்' படத்தில் அதிகாரத்தை காட்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த, நட்ராஜை தொடர்ந்து பலர் திட்டு வருவதன் எதிரொலியாக, அது வெறும் நடிப்பு தான், என்னை யாரும் திட்டாதீர்கள் என கதறியுள்ளார்.  

கடந்த வாரம் வெளியான 'கர்ணன்' படத்தில் அதிகாரத்தை காட்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த, நட்ராஜை தொடர்ந்து பலர் திட்டு வருவதன் எதிரொலியாக, அது வெறும் நடிப்பு தான், என்னை யாரும் திட்டாதீர்கள் என கதறியுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய’கர்ணன்’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படும் போதிலும், 'கர்ணன்' வசூலில் சாதனை படைத்து வருகிறார்.

மாரி செல்வராஜின் இயக்கத்தையும், தனுஷின் நடிப்பையும் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். பலர் 'அசுரன்' படத்தை தொடர்ந்து, இந்த படத்திற்கும் தனுஷுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறி வருகிறார்கள். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு பொருந்தும் படி தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தார். 

அதே போல் கர்ணன் படத்தில் 'கண்ணபிரான்' என்கிற போலீஸ் அதிகாரியாக, தன்னுடைய அதிகாரத்தால் கிராமக்களை அடித்து துன்புறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ். இவர் வெளிப்படுத்தியது நடிப்பு என்பதை கூட மறந்து, பலர் அவரை திட்டினார்கள். அதே நேரத்தில் இவரது நடித்துக்கு வாழ்த்துக்களும் குவிந்தது. இதையடுத்து தன்னை யாரும் திட்டவேண்டாம் என, ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நட்டி நட்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்.. phone messagela.. திட்டாதீங்கப்பா.. முடியிலப்பா.. அது வெறும் நடிப்புப்பா.. ரசிகர்களுக்கு எனது நன்றி! என தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்