தமிழில் 'கர்ணன்' என்றால் தெலுங்கில் 'வக்கீல் சாப்'..! வசூலில் நொறுக்கும் படங்கள்!

By manimegalai aFirst Published Apr 12, 2021, 7:36 PM IST
Highlights

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, 50 சதவீத பார்வையாளர்களுடன் தமிழில் வெளியான 'கர்ணன்' மற்றும் 'வக்கீல் சாப்' ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்தது வருகிறது.
 

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, 50 சதவீத பார்வையாளர்களுடன் தமிழில் வெளியான 'கர்ணன்' மற்றும் 'வக்கீல் சாப்' ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்தது வருகிறது.

ஏற்கனவே கொரோனா தாக்கத்தால், சுமார் 8 மாதங்களுக்கு மேலாக நொந்து நூலாகிய திரையுலகினரை, மீண்டும் வாட்டி வதக்கி வருகிறது கொரோனாவின் இரண்டாவது அலை. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு போடப்படும் சூழ்நிலை உருவாகுமா? என சாதாரண மக்கள் முதல் அனைவருமே அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் கொரோனாவின் இரண்டாவது அலையால் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அந்த வங்கியில்  இன்று ஒரே நாளில் மட்டும் 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய மற்றும் மாநில அரசுகள். முதற்கட்டமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.  அதன்படி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கட்டுப்பாட்டுக்கு இடையே தமிழில் வெளியான 'கர்ணன்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 3 நாட்களில் சுமார் 25 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'வக்கீல் சாப்' திரைப்படமும் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதியோடு வெளியானாலும் இதுவரை 32 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் கடந்த வாரத்தில் வெளியாகி, வசூலில் சாதனை புரிந்து வருவது.  இது ரசிகர்களையும் படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே கொண்டு வெளியான 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து இவ்விரு படங்களுமே வசூல் சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!