
தற்போது தமிழகத்தில் மின்னல் வேகத்தில், பரவி வருகிறது கொரோனா. இந்நிலையில் 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த செந்தில், கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யபட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 6,711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,40,145ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் நேற்று மட்டும் 2,105 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,181ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டு படுத்த விரைவில் முழு ஊரடங்கு போடப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான செந்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காமெடி நடிகர் செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. திரைப்பட வாய்ப்புகள் குறைந்த பின்னர், அவ்வப்போது அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்து வந்தார்.
அந்த வகையில் நடந்து முடிந்த, சட்டமன்ற தேர்தலில்.... பாஜக மற்றும் அதன் கூட்டணி காட்சிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதை தொடர்ந்து, இவர் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர் எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து வெளியாகியுள்ள தகவலில், நடிகர் செந்திலை தவிர்த்து அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.