இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில், எப்படி 4ஆவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நடிகர் நரேஷின் 3ஆவது மனைவி ரம்யா ரகுபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ஒன்றுவிட்ட சகோதரர் நடிகர் நரேஷ். ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து கொண்டார். தற்போது 4ஆவது திருமணம் குறித்து சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 60 வயதான நடிகர் நரேஷ், புத்தாண்டையொட்டி கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் உடன் லிப் லாக் செய்யும் வீடியோ வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர்.
ஆனால், மல்லி பெல்லி (மீண்டும் திருமணம் செய்து கொள்) படத்திற்கான விளம்பர வீடியோ என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், நரேஷின் 3ஆவது மனைவி மனைவி ரம்யா ரகுபதி தன்னை இன்னும் விவாகரத்து செய்யாததால், பத்விதா லோகேஷை திருமணம் செய்து கொள்ள விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஷாருக்கான் மகளும், அமிதாப் பச்சனின் பேரனும் டேட்டிங்கா? ஃபர்ஸ்ட் படத்திலேயே காதலா?
ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், எப்படி இந்த அளவுக்கு அவர் கீழ்த்தரமாக நிற்க முடியும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மறைந்த நடிகர் கிருஷ்ணாவுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நரேஷ் குற்றம் சாட்டியதாகவும், போலி கையெழுத்துடன் எழுதப்பட்ட கடிதம் அவரிடம் இருப்பதாகவும் ரம்யா அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார். நரேஷ் மற்றும் ரம்யா ரகுபதிக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், முன்னாள் மனைவிகள் ஒவ்வொருவருடனும் சமரசம் செய்ய முடியாத பிரச்சனை காரணமாக அவர்களில் இருவரை பிரிந்து மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியுடன் இருந்து வந்தார்.
துணிவு ஃபர்ஸ்ட் ஆஃப் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது - இயக்குநர் ஹெச் வினோத்!
இந்த நிலையில், தற்போது அவரையும் பிரிந்து 4ஆவதாக நடிகை பவித்ரா லோகேஷை பிடித்துள்ளார். இருவரது காதல் விவகாரம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால், இன்னும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஒன்றாகவும் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் ஒன்றாக ஹோட்டரில் தனியாக இருந்த போது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி அவர்களை காலணி கொண்டு அடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது நரேஷ் விஷில் அடித்துக் கொண்டு ஜாலியாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்திரம் முதல் காந்தி பாத் வரை: ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கிய நடிகைகளின் ஹாட் சீன்ஸ்!