ஷாருக்கான் மகளும், அமிதாப் பச்சனின் பேரனும் டேட்டிங்கா? ஃபர்ஸ்ட் படத்திலேயே காதலா?

By Rsiva kumar  |  First Published Jan 7, 2023, 4:24 PM IST

பாலிவுட் மாஸ் ஹீரோ ஷாருக்கானின் மகள் சுஹானா கானும், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தாவும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பதான், ஜவான், டைகர் 3, துங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பதான் படத்தின் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஷாருக்கானின் மகளும், நடிகையுமான சுஹனா கானும், அமிதாப் பச்சனின் பேரனுமான அகஸ்தியா நந்தா இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பாலிவுட்டில் அறிமுகமாகாத ஷாருக்கானின் மகள் தற்போது தி ஆர்ச்சீஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் தான் அமிதாப் பச்சனின் பேரனான அகஸ்தியா நந்தாவும் நடித்துள்ளார். மேலும், ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர், வேதாங் ரெய்னா, யுவராஜ் மெண்டா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

துணிவு ஃபர்ஸ்ட் ஆஃப் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது - இயக்குநர் ஹெச் வினோத்!

Latest Videos

தி ஆர்ச்சீஸ் என்ற படத்தின் மூலமாக ஒருவரையொருவர் அறிமுகமாகிக் கொண்டுள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் தினத்தன்று நந்தா, சுஹானாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அனைவரிடமும் தனது பார்ட்னர் என்று கூறி அறிமுகம் செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. முதல் படத்தின் மூலம் அறிமுகமான இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்துக் கொண்டுள்ள நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

மாஸ்திரம் முதல் காந்தி பாத் வரை: ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கிய நடிகைகளின் ஹாட் சீன்ஸ்!

இருவரும் டேட்டிங் செய்து வரும் தகவல் அகஸ்தியாவின் தாயார் ஸ்வேதா பச்சனுக்கு தெரியும் என்றும், இந்த உறவுக்கு அவரும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு ஏன், ஸ்வேதா பச்சனுக்கு சுஹானாவை ரொம்பவும் பிடித்துவிட்டதாகவும், ஆதலால், அவரும் இருவரது பழக்கத்திற்கும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், இருவரும் டேட்டிங் சென்று வருவதை அவர்களாகவே அறிவித்தால் மட்டுமே உண்மை என்று தெரியவரும். அதுவரையில் இது வெறும் தகவல், செய்தியாக மட்டுமே பரவி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியமாக இருந்தாலும் இது தான் உண்மை: ஏன் அஜித் குமார் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை தெரியுமா?

click me!