தமிழ முதலமைச்சரிடம் நடிகர் நெப்போலியன் சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி! எவ்வளவு தெரியுமா?

By manimegalai aFirst Published May 19, 2021, 10:56 AM IST
Highlights

கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். 

கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் நெப்போலியன் சார்பில் நிதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தும்... தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்: அச்சு அசல் சாவித்ரிபோலவே மாறிய 'கண்ணம்மா'... கீர்த்தி சுரேஷுக்கே செம்ம டஃப் கொடுத்த புகைப்படங்கள்..!
 

அந்த வகையில், அரசியல் கட்சி தலைவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ரூ.10 லட்சமும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளனர். தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: இது சரிப்பட்டு வராது... கிருத்திகா உதயநிதி படத்திற்கு குட்பை சொன்ன அஸ்வின்! இது தான் காரணமா..?
 

மேலும் திரையுலகை சேர்ந்த சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் ரூ.1 கோடியும், அஜித் ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயேன் ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளனர். நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய அப்பா மற்றும் சகோதரர் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இயக்குநர்கள் வெற்றிமாறன், ஷங்கர் ஆகியோர் தலா ரூ.10 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார், அதே போல் தொடர்ந்து பலர் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: கொழுக்கு மொழுக்கு லுக்கில் இருப்பது 'சில்லுனு ஒரு காதல்' குட்டி பாப்பாவா? ஸ்ரேயா ஷர்மாவின் ஹாட் போட்டோஸ்!
 

அந்த வகையில் நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் சார்பாக, முதலமைச்சரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்க பட்டுள்ளது. ரூ.25 லட்ச ரூபாய்க்கான காசோலையை  ஜீவன் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீவன் அறக்கட்டளை சார்பாக அதன் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். 

click me!