
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இவரின் முதல் இயக்கமான இந்த படம் ஏராளமான பாராட்டுகளை குவித்து வருகிறது. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி வெளியான ராக்கெட்ரி நல்ல வரவேற்பை பெற்றதுடன். ஓடிடியிலும் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம் மற்றும் நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் இதுவரை கிட்டத்தட்ட 50 கோடியை வசூலாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றிருந்தது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சீமான் உள்ளிட்டோர் மாதவனின் படம் குறித்து வெகுவாக பாராட்டி இருந்தனர். முன் அனுபவம் ஏதும் இன்றி மாதவன் உருவாக்கியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் தற்போது மேலும் ஒரு மயில் கல்லை எட்டி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...போதைக்கு அடிமையான நடிகை... தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்
அதாவது நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு காட்சியாக ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரையிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு படத்தை திரையிடுவது சாதாரண விஷயம் இல்லை. இந்த படத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இது குறித்தான புகைப்படங்களை ஜே பி நட்டா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...முஸ்தஃபா முஸ்தஃபா முதல் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் இருந்து 5 பெஸ்ட் பாடல்கள்..ஃப்ரெண்ட்ஷிப் டே ஸ்பெஷல்
படம் திரையிடப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாதவன், நாடாளுமன்றத்தில் எனது திரைப்படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது குறித்து நான் பெருமையாக உணர்கிறேன். அதே நேரத்தில் எனக்கு சிறு பதற்றமும் இருந்தது. நாடாளுமன்றத்தில் ஒரு படத்தை திரையிடுவது அவ்வளவு எளிதல்ல. என்னால் இங்கு நடப்பதை நம்ப முடியவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு... சக்சஸ் மீட்டா?... இல்லேனா அடுத்த பட அறிவிப்பா? - லெஜண்ட் சரவணன் போட்ட ஒரே டுவிட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்
இந்த படத்தில் சூர்யா மற்றும் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். பல வெளிநாடுகளில் திரையிடப்பட்டுள்ள இந்தப் படம் நம்பி நாராயணனின் வழிகாட்டுதலின் படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.