சூரியுடன்...டான் பேமஸ் சீனில் இணைந்த ரம்யா பாண்டியன்..அவரே வெளியிட்ட வீடியோ இதோ!

Published : Aug 06, 2022, 08:06 PM ISTUpdated : Aug 06, 2022, 08:07 PM IST
சூரியுடன்...டான் பேமஸ் சீனில் இணைந்த ரம்யா பாண்டியன்..அவரே வெளியிட்ட வீடியோ இதோ!

சுருக்கம்

தற்போது சூரி உடன் டான் படத்தின் ஃபேமஸ் டயலாக்கை பேசி ரம்யா பாண்டியன் வீடியோ வெளியிட்டுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இவர் முன்னதாக குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் பங்கேற்று இரண்டாவது ரன்னராக வந்தார். அந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்களின் ஏகபோக ஆதரவு இருந்தது. இந்த சீசனில் புகழுடன் இவரின் கலகலப்பான எபிசோடு பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்.

இதையடுத்து கலக்கப்போவது யாரு சீசன் 9-ல்  நீதிபதியாக பங்கேற்ற இவர் பிக் பாஸ் சீசன் 4  -ல் 3 வது ரன்னர் அப் பெற்றிருந்தார். பின்னர் பிபி ஜோடிகள், பிக் பாஸ் அல்டிமேட் சீசன்1 உள்ளிட்டவற்றில் பங்கேற்றிருந்தார்.  முன்னதாக டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  தற்போது இடும்பன் காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்டவற்றில் ஒப்பந்தமாகியுள்ள இவர் முகிலன் என்னும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...'கந்த முகமே' ஆல்பம்..திருச்செந்தூர் முருகனுக்கு சமர்ப்பித்த தேனிசை தென்றல்

பிரபல நடிகர் அருண்பாண்டியனின் உறவினரான ரம்யா அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.  இந்நிலையில் தற்போது சூரி உடன் டான் படத்தின் ஃபேமஸ் டயலாக்கை பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் சூரி - சிவகார்த்திகேயனும் பேசும் வசனங்களை தற்போது இருவரும் பேசி உள்ளனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...தலைவனாக சாக விரும்பவில்லை.. அரசியல் குறித்து மனம் நொந்த கமல்..

மேலும் செய்திகளுக்கு...கர்ப்பகால போட்டோ சூட் நடத்திய தொகுப்பாளினி..தியாவிற்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

சிபி சக்கரவர்த்தியின் முதல் படமான டான் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில்  பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சுமார் 125 கோடிகளை பாக்ஸ் ஆபிஸாக பெற்ற இந்தப் படம் கல்லூரி இளைஞன் தனது லட்சியத்தை கண்டறிந்து அதில் ஜெயிக்கும் கதைக்களத்தை கொண்டிருந்தது. அதோடு இதில் இடம்பெற்று இருந்த தந்தை செண்டிமெண்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. குறிப்பாக சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் கொரியன் கலந்த டயலாக்குகள் மிகவும் பிரபலமானது. இது குறித்தான ரீல்ஸ்களும் அதிக அளவில் பதியப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?