ராக்கெட்ரியை புகழ்ந்த சீமான்...மாதவன் என்ன சொன்னார் தெரியுமா?

Published : Aug 06, 2022, 04:57 PM ISTUpdated : Aug 06, 2022, 05:52 PM IST
ராக்கெட்ரியை புகழ்ந்த சீமான்...மாதவன் என்ன சொன்னார் தெரியுமா?

சுருக்கம்

சீமான் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள மாதவன், 'எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த குழுவும் மிகப்பெரிய விருதை பெற்றுள்ளது போல் உணர்கிறேன். என் மகிழ்ச்சியை என்னால் அடக்க முடியவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

90களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகனாக சாக்லேட் பாயாக இருந்த மாதவன் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவரின் முதல் படமே பிளாக்பாஸ்டர் அடித்துள்ளது. ராக்கெட் தி நம்பி எஃபெக்ட் என்னும் படத்தை இயக்கியுள்ள மாதவன் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படம் முழுவதும் நம்பி நாராயணனின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டது. சூர்யா, ஷாருக்கான் இருவரும் காமியோ ரோலில் நடித்துள்ளனர். இதற்காக இருவரும் பணம் எதுவும் பெறவில்லை என மாதவன் முன்பு தெரிவித்திருந்தார்.  கடந்த ஜூலை ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த படம் குறித்து சூப்பர் ஸ்டார் நேரில் அழைத்து பாராட்டு இருந்தார். அப்போது மாதவன்  உடன் நம்பி நாராயணனுடன் இருவரும் சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் செய்திகளுக்கு... அமெரிக்கன் பை கொடுத்த பரிசு..சுமார் 200 பேருடன் உடலுறவு..திடுக்கிடும் தகவலை பகிர்ந்த நடிகை  

தகவல் திருட்டு புகாரில் உளவுத்துறை இடம் சிக்கும் விஞ்ஞானி படும் துயரங்கள் மற்றும் அவரது குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் 28 நாட்களாகியும் இன்னும் சுமார் 350 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...தனுஷிடம் எத்தனை சொகுசு கார்கள் இருக்கு தெரியுமா? விவரம் உள்ளே!

வெளிநாட்டு உரிமம், தொலைக்காட்சி வியாபாரம் மற்றும் ஓடிடி மூலமாக 50 கோடி வசூல் கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில்  படம் குறித்த விமர்சனத்தை இயக்குனரும் அரசியல் தலைவருமான சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அன்புத்தம்பி மாதவன் அவர்கள் தயாரித்து இயக்கி நடித்து வெளிவந்துள்ள ராக்கெட் நம்பி விளைவு திரைப்படத்தை பார்த்து ரசித்ததாகவும் இப்படி ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்கியதற்கு மாதவனுக்கு வாழ்த்துக்கள் என பாராட்டி  மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...மீனா கணவர் இறந்தது குறித்து மிருகத்தனமாக பேசிய பயில்வான்...கடுப்பான தயாரிப்பாளர் கே. ராஜன்

இதற்கு நன்றி தெரிவித்துள்ள மாதவன், "எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.  ஒட்டுமொத்த குழுவும் மிகப்பெரிய விருதை பெற்றுள்ளது போல் உணர்கிறேன். என் மகிழ்ச்சியை என்னால் அடக்க முடியவில்லை.  என் இதயம் நன்றியுடன் பணிவுடன் நிரம்புகிறது. நீண்ட இதய பூர்வமான பதிவுக்கு நன்றி அண்ணன் சீமான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!