காமெடி நடிகர் லோகேஷ் பாப் கால் - கை செயலிழந்தது உண்மையா? அவரின் தற்போதைய நிலை!

By manimegalai aFirst Published Mar 4, 2020, 4:07 PM IST
Highlights

பிரபல காமெடி நடிகரும், தொகுப்பாளருமான லோகேஷ் பாப் என்பவருக்கு திடீர் என கை கால் செயலிழந்து விட்டதாகவும், அவருடைய மருத்துவ செலவிற்காக அவருடைய நண்பர்கள் சமூக வலைத்தளம் மூலம் பணம் சேகரித்து வருவது போன்ற சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இவரின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
 
வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே போல்... சின்னத்திரையில் நடிகர்களாகவும், தொகுப்பாளர்களாகவும், இருக்கும் பலருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அந்த வகையில், ஆத்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் லோகேஷ் பாப். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடிதான், ஜாம்பி,  உள்ளிட்ட சில படத்திலும் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவருக்கு திடீர் என கை - கால் செயலிழப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய மருத்துவ செலவிற்கு 7 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததால், அவருடைய நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் அவர் புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டு பண உதவி கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் இவருடைய ரசிகர்கள் சோகத்தில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், லோகேஷ் பாப்க்கு உடல் நலம் சரியில்லாமல் போனது உண்மை தான், ஆனால் கை - கால் செயலிழப்பு ஏற்படவில்லை என அவருக்கு நெருக்கமானார் தெரிவித்துள்ளனர்.

அதே போல் தற்போது இவருடைய உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் விரைவில் அவருடைய உடல் நிலை தெரிவித்தும் என தெரிவித்துள்ளனர்.

click me!