Latest Videos

அடுத்தடுத்து வாரிசு நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் அருண்ராஜா காமராஜ்... நெக்ஸ்ட் படம் யாரோடு தெரியுமா?

By Asianet Tamil cinemaFirst Published May 24, 2022, 10:04 AM IST
Highlights

Arunraja Kamaraj : கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் காமெடி வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். இதையடுத்து நட்புனா என்னனு தெரியுமா, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்த அவர், ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்களை எழுதி பாடலாசிரியராகவும் வலம் வந்தார்.

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் அருண்ராஜா. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சமீபத்தில் சீனாவில் வெளியான இப்படம் அங்கும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

அருண்ராஜா இயக்கத்தில் 2-வதாக உருவான படம் நெஞ்சுக்கு நீதி. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்ட்டிகிள் 15 என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி இருந்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் அடுத்ததாக நடிகர் கார்த்தி உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தையில் கத்திய லோகேஷ் கனகராஜ்... எல்லாத்துக்கும் காரணம் கமல் தானாம்

click me!