
தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக கோலேஞ்சியா நயன்தாரா. காதல் தோல்விகளால் துவண்டிருந்தார். சிம்பு, பிரபுதேவா உடனான காதல் முறிவுக்கு பின் சோகத்தில் இருந்தவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது மீண்டும் காதல் மலர்ந்தது. விக்கி இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் துவங்கியா காதல் பயணம் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இவர்கள் இருவரும் அவ்வப்போது ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்ஸின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்வர். காதலுடன் நிறுத்திக்கொள்ளாமல் பிஸ்னஸ் பார்ட்னர்களாக இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் தயாரித்த காத்து வாக்குல ரெண்டு காதல் நல்ல லாபத்தை கொடுத்திருந்தது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமனதா என மூவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விக்னேஷ் இயக்கி இருந்தார்.
முன்னதாக தங்களது படம் வெற்றி பெற வேண்டும் என்றும் திருப்பதி கோவிலில் வேண்டுதல் செய்திருந்தனர் இருவரும் , அதோடு பல்வேறு கோவில்களுக்கும் சென்று நயன் -விக்கி வழிபாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தை அவ்வப்போது நிறைத்து வருவதுண்டு.
இதற்கிடையே இந்த காதல் ஜோடி வரும் ஜூன் 9 -ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெறவுள்ளதாகவும். அதற்காக 75 வது கேன்ஸ் விழாவில் நயன்தாரா புறக்கணித்தாகவும் சொல்லப்பட்டது. பின்னர் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் இருப்பதால் தள்ளிப்போக வாய்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நயன்தார இன்று விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் வழிபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் நயன்தாரா பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்துள்ளார். தங்களது திருமணத்தில் எந்த தடையும் வராமல் நல்லபடியாக நடிக்க காதல் ஜோடிகள் கண்ணீர் மல்க வழிபட்ட வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.