கமலுக்கு முதல் பாடல் பாடிய பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!!

First Published Apr 25, 2018, 11:10 PM IST
Highlights
Actor Kamal hassans first song singer rajeswari expired


கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த ’களத்தூர் கண்ணம்மா ’படத்தில் ’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலை பாடிய பிரபல பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 87. ராஜேஸ்வரியின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

குழந்தை போன்று கொஞ்சும் குரலுக்கு சொந்தகாரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி, 1947 ஆம் ஆண்டு ஏ.வி.எம்மின் நாம் இருவர் படத்தில் காந்திஜியை புகழ்ந்து பாடி தனது 16 வயதில் திரை இசைபயணத்தை தொடங்கினார் பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி.

1952ஆம் ஆண்டு வெளியான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பராசக்தி திரைபடத்தில் எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய ரசிக்கும் சீமானே என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ளது

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணாம்மா படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.. என்ற பாடல் அவரை குழந்தை பாடல்களின் அரசி என்று சொல்லவைத்தது

குழந்தையும் தெய்வமும் படத்தில் அவர் பாடிய கோழி ஒரு கூட்டிலே என்ற பாடலும் காலத்தால் அழியாத  பாடலாக உள்ளது

நாயகன் படத்தில் இளையராஜாவின் இசையில், பாடகி ஜமுனா ராணியுடன் இணைந்து பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடலும் கொஞ்சும் குரலால் ரசிகர்களை கவர்ந்தார் எம்.எஸ் ராஜேஸ்வரி.

1990-க்கு மேல் வந்த ’துர்கா’ படத்தில் பேபி ஷாம்லிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஏராளமான படங்களில் குழந்தைக் குரலால் ரசிகர்களை கவர்ந்த எம்.எஸ் ராஜேஸ்வரி,  வயது மூப்பாலும், உடல் நலக்குறைவாலும் சென்னையில் காலமானார் அவருக்கு வயது 87. எம்.எஸ்.ராஜேஸ்வரியின் உடலுக்கு திரைஉலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்குகள் நாளை  மாலை நடைபெறுகின்றது

click me!