நடிகர் ஜான் விஜய் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பன ஸ்கிரீன்ஷாட்களை சின்மயி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், நெகட்டிவ் ரோல்களில் நடித்து வருபவர் ஜான் விஜய். இந்த நிலையில் நடிகர் ஜான் விஜய் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல் குறித்து தொடர்ந்து பேசி வரும் பிரபல பாடகி சின்மயி தற்போது ஜான் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் ஜான் விஜய்க்கு எதிரான ஸ்கீரின் ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார்
சில நாட்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து செய்தி வெளியிட்ட ஒரு பெண் பத்திரிகையாளர், ஜான் நேர்காணலுக்காக காத்திருந்தபோது அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்தக்கொண்டதாக அந்த பத்திரிகையாளர் குற்றம்சாட்டினார். அப்போது முதல் சின்மயி ஜான் மீதா மீது பல புகார்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து வருகிறார்.
undefined
"மலையாள சினிமாவின் பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றிய நியூஸ்மினிட் அறிக்கைக்குப் பிறகு, ஜான் விஜய் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஜான் விஜய் பற்றி கூறிய விஷயங்களையும் சின்மயி குறிப்பிட்டுள்ளார். “ நடிகர் ஜான் விஜய் எப்போதுமே சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்களுக்கு செல்வார். அங்கு வரும் பெண்களை அவர் தவறான கண்ணோட்டத்துடன் தான் அணுகுவார். அவர்கள் நோ சொன்னாலும் அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வார்.
After The Newsminute report about the Sexual Assault case of Malayalam cinema also mentioned John Vijay for his misdemeanour with the journalist
There are other women speaking about his behaviour in general. pic.twitter.com/AfeLgdC0lY
அவர் ஒரு பிரபலம் என்பதால் பெண்கள் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவரிடம் பேசக்கூட பெண்கள் விரும்பமாட்டார்கள் என்றாலும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே இருப்பார்” என்று அந்த பெண் கூறிய தகவலை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஜான் விஜய் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுக்கு வரலனா என்ன ஆகிருப்பேன் தெரியுமா? தனது லட்சிய கனவை பற்றி பேசிய நயன்தாரா!
நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதன்முறை அல்ல. கடந்த 2018-ம் ஆண்டு மீ டூ இயக்கம் பிரபலமாக இருந்த போது ஜான் விஜய் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை முன்வைத்தார். அப்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஜான் விஜய் “ “நான் மிகவும் வெளிப்படையான நபர், எந்த உள்நோக்கங்களுடனும் நான் பேசவதில்லை. ஆனால் சில சமயங்களில் எனது நகைச்சுவைகள் அனைவருக்கும் வேடிக்கையாக இருக்காது என்பதை நான் புரிந்துகொண்டேன். சிலர் என்னை தவறாக புரிந்து கொள்வார்கள். அப்படி நான் பேசும் போது யாராவது தவறாக நினைத்தால் அப்போதே என் பேச்சை நிறுத்திவிடுவேன். அல்லது அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிடுவேன்” என்று கூறினார்.