
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் பணம் பறித்துக் கொண்டு, பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என ஆர்யா மீது விட்ஜா என்ற பெண் சிபிசிஐடி-யிடம் ஆன்லைன் மூலம், புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகா் ஆா்யாவிடம் ஏற்கனவே சைபா் குற்றப்பிரிவினா் கடந்த மாதம் 10-ஆம் தேதி விசாரணை செய்தனா். இதன் தொடா்ச்சியாக அந்தப் பெண்ணிடமும் வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரிடம் நடிகா் ஆா்யா என்று பேசிய நபரின் புகைப்படம், வீடியோ பதிவு, அந்த நபா் தொடா்பு கொண்ட செல்லிடப்பேசி எண்கள், வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட பல்வேறு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. அதன் மூலமாக ஆா்யாவின் பெயரப் பயன்படுத்தி, மாறுவேடத்தில் வேறு ஒரு நபா், அந்தப் பெண்ணிடம் பேசி ரூ.70 லட்சம் மோசடி செய்திருப்பதை போலீஸாா் கண்டறிந்தனர்.
இதனையடுத்து ஆா்யா போல பேசி மோசடியில் ஈடுபட்டது சென்னை புளியந்தோப்பைச் சோந்த முகமது அா்மான், அவருக்கு உடந்தையாக முகமது அா்மானின் உறவினா் முகமது ஹூசைனி பையாக் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த நடிகர் ஆர்யா, உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல், கண்டமேனிக்கு விமர்சனம் செய்த, சில மீடியாக்களுக்கு தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவிற்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஜெர்மனி பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தற்போது நடிகர் ஆர்யா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால், ஜெர்மனியை சேர்ந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிய வழக்கில் நடிகர் ஆர்யாவுக்கு தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.