பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வது உறுதியா? அப்போ... வேற லெவல் தான்!!

Published : Sep 04, 2021, 04:26 PM IST
பிக்பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வது உறுதியா? அப்போ... வேற லெவல் தான்!!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்பது கிட்ட தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இதில் யார் யார் எல்லாம் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்த, தகவல் தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகையின் மகள் ஒருவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.   

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்பது கிட்ட தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இதில் யார் யார் எல்லாம் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்த, தகவல் தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகையின் மகள் ஒருவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்த போது, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என பலர் போர் கொடி தூக்கினாலும், பின்னர் இந்த ஷோவுக்கென பல ரசிகர்கள் உருவாகினர். இந்த நிகழ்ச்சி இது நாள் வரை திரையில் பார்த்த பிரபலங்களின் உண்மை முகங்களை கண்ணாடி போல் பிரதிபலிக்க செய்தது. குறிப்பாக உலக நாயகன் கலந்து கொள்ளும் நாட்களில் வேற லெவலில் வரவேற்பு கிடைத்தது என்றும் கூறலாம். ஒருவரை அதட்டாமலும், திட்டாமல் இப்படி கூட கேள்விகள் கேட்டு பதிலடி கொடுக்க முடியுமா? என தன்னுடைய பாணியில் ஒவ்வொரு சீசனிலும் தூள் கிளப்பி வருகிறார்.

எனவே கமல்ஹாசன் வரும் அந்த இரண்டு நாட்களில் மட்டும், விஜய் டிவி டிஆர்பி வேற லெவலுக்கு கெத்து காட்டும். பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் நடிகர் ஆரி அர்ஜுன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் என்பது நாம் அறிந்தது தான். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் கடந்த ஜூன் அல்லது ஜூலை மாதமே பிக்பாஸ் சீசன் 5  துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, நிகழ்ச்சி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக இரண்டு புரோமோ வெளியாகியுள்ளது. எனவே தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் அனைவருடைய அடுத்த கேள்வியாக இருப்பது இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள உள்ளது யார் யார் என்பது தான். இதுகுறித்த தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஷகிலாவின் மகளும், திருநங்கையுமான மிளா கலந்து கொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்தும் எந்த ஒரு அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை... எனவே இவர் கலந்து கொள்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?