
ஹாலிவுட் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச், துணிச்சலுடன் லண்டன் தெருவில் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.
செர்லாக் என்கிற தொலைக்காட்சித் தொடரில் துப்பறியும் வீரரான செர்லாக் ஹோம்சாக நடித்துப் புகழ்பெற்றவர் பெனடிக்ட் கம்பர்பேட்ச். இவர் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த Avengers Infinity War, திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
லண்டனில், பெனடிக்டும் அவர் மனைவி சோபி ஹன்டரும் உபேர் வாடகைக் காரில் சென்றபோது மேரிலிபோன் மேட்டுத் தெருவில் மிதிவண்டியில் உணவு வழங்கச் சென்ற ஒருவரை வழிப்பறிக் கொள்ளையர்கள் 4பேர் தாக்கி மிதிவண்டியைப் பறிக்க முயன்றதைப் பார்த்துள்ளார்.
அப்போது காரை நிறுத்தித் துணிச்சலுடன் கீழே இறங்கிச் சென்ற பெனடிக்ட் வழிப்பறிக் கொள்ளையர்களை அடித்து விரட்டிவிட்டு மிதிவண்டிக்காரரைக் காப்பாற்றியுள்ளார்.
நடிகர்கள் பலர் படத்தில் மட்டுமே வீரவசனம் பேசி சாகசங்களைச் செய்யும் காலத்தில், துணிச்சலாக கீழே இறங்கி வழிப்பறிக்கொள்ளையர்களை அடித்துவிரட்டித் தொழிலாளரைக் காப்பாற்றிய பெனடிக்ட் கம்பர்பேட்ச்சை பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.