
முன்னணி மலையாள நடிகரும், பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் ஃபாசில் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மலையாள திரையுலகில், தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பு ராட்சஷன் என பெயர் எடுத்தவர் பகத் ஃபாசில். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் முகத்தில் காட்டும் வேரியேக்ஷனுக்கே ரசிகர்கள் மத்தியில், கை தட்டல் அள்ளும். ரிச் பிஸ்னஸ் மேன் கதாபாத்திரம் முதல், எளிமையான மனிதர் என எப்படி பட்ட கதாபாத்திரத்தை கொடுத்தாலும் வேற லெவலில் இவரது நடிப்பு இருக்கும்.
மேலும் செய்திகள்: மாளவிகா மோகனனுக்கு வித்தியாசமான செல்ல பெயர் வைத்து அழைக்கு தனுஷ்..!
மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சையமானவர். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழை விட மலையாள திரையுலகத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 'மலையன்குஞ்சு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும் போது, பகத் ஃபாசில் திடீர் என ஒரு கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதற்காக தற்போது சிகிச்சை பெற்று வரும் இவர், இந்த விபத்து குறித்த அனுபவத்தை தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்: தளபதியின் முந்தய படத்தின் சாதனையை முறியடித்த 'பீஸ்ட்'... எதில் தெரியுமா?
அதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... " விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன். ஆபத்துக்கு மிக அருகில் சென்று உயிர் பிழைத்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கீழே விழும்போது எனது முகம் தரையில் மோதுவதற்கு முன்பு, ஏதோ ஒரு உந்துதலில் கைகளை தரையில் ஊன்றிவிட்டேன். இப்படி சமயோசிதமாக நான் செய்ததால் அதிஷ்டவசமாக தலை தரையில் படாமல் தவிர்க்க பட்டது. விபத்து காரணமாக மூக்கில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளன. அந்த தழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும் " என்று பகத் பாசில் கூறினார்.
மேலும் செய்திகள்: துளியும் மேக்அப் இல்லாமல்... குட்டை டவுசருடன் செம்ம கொஞ்சல்ஸில் ராஷ்மிகா..! யாருடன் தெரியுமா?
மேலும் இவரது ரசிகர்கள் பலர் விரைவில் இவர் உடல் நலம் பெற்று நடிப்புக்கு திரும்ப வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.