
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல தமிழகத்தில் குறைந்து வந்தாலும் தடுப்பூசி போட்டு கொள்வதே, கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் பேராயுதமாக இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகள் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
தமிழக மக்களை பாடாய் படுத்தி வரும், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் மட்டுமே. எனவே, பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்து கொள்வது மிகவும் அவசியம். காரணம், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்டால் தான் நம் உடலில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி அகதிகரிக்கும். எனவே முதல் டோஸ் மட்டும் போட்டு கொண்டு விட்டுவிடாமல் இரண்டாவது டோஸ் போட்டு கொள்வதும் மிகவும் அவசியம் என மருத்துவர்களும், சுகாதாரத்துரையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிப்பை தவிர்த்து பல்வேறு சமூக கருத்துகளையும், படிக்க முடியாத ஏழை குழந்தைகளின் கனவை நினைவாக்கும் விதமாக 'அகரம்' அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனையிவும், பிரபல நடிகையுமான ஜோதிகா இருவரும் பிரபல பிரபல மருத்துவமனையில் தங்களது முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
கொரோனா தொற்றால் பாதிக்க பட்ட நடிகர் சூர்யா, பின்னர் அதில் இருந்து மீண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தன்னுடைய 40 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.