தளபதிக்கு நடு கடலில் கட்அவுட்... கெத்து காட்டிய ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published Jun 22, 2021, 7:41 PM IST
Highlights

தளபதி விஜய்யின் பிறந்தநாளை, படு தூளாக சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். நடுக்கடலில் கட்அவுட் வைத்து தளபதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

தளபதி விஜய்யின் பிறந்தநாளை, படு தூளாக சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். ரசிகர்களுக்காக தளபதியின் பிறந்தநாளுக்கு முந்தய தினமே ட்ரீட் கொடுக்கும் விதமாக மாலை 6 மணிக்கு தளபதி நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும், அதிகாலை 12 மணிக்கு இரண்டாவது போஸ்டரும் வெளியானது. 

மேலும் கடந்த செவ்வாய் கிழமை அன்று தளபதியின் காமன் டிபி ஒன்றை வெளியிட்டு கொண்டாட்டத்தை துவங்கிய ரசிகர்கள், நேற்று முதலே விதவிதமாக, தளபதியின் போஸ்டர்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே கலக்கி வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் தளபதியின் வீட்டு வாசலில் குவிந்து, அவர் வீட்டில் இல்லை என்றாலும் கேட் முன்பு கேக் வெட்டி கொண்டாடிய தகவல்கள் வெளியாகியது.

இதை தொடர்ந்து, புதுச்சேரி விஜய் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று... நடு கடலில் போஸ்டர் வைத்து பாலாபிஷேகம் செய்து தளபதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் மன்றத்தை சேர்த்த ரசிகர்கள், தொகுதி தலைவர் வசந்தராஜா தலைமையில் கிளைமன்றம் தலைவர் கில்லி செல்வா மற்றும் நிர்வாகிகள் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

ஏற்கனவே புதுவையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள்... இதே போன்று தனுஷின் படம் கர்ணன் வெளியான போது நடு கடலில் கட்அவுட் வைத்த நிலையில், அவர்களை தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளுக்கு தளபதி ரசிகர்களும் நடு கடலில் கட்அவுட் வைத்து கெத்து காட்டியுள்ளனர்.

click me!