
ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாளான இன்றைய தினத்தை அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத்துறையினரும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் ரசிகர்கள் மிகவும் காத்திருந்தது தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுன் வாழ்த்துக்களை தான். காரணம் கடந்த ஆண்டு கடந்த வருடம் ‘மாஸ்டர்’ பட குட்டி ஸ்டோரி பாடலை வயலின் மூலம் வாசித்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருந்தது தாறுமாறு வைரலானது.
விஜய்யுடன் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’, 2018 ஆம் ஆண்டு வெளியான ‘சர்கார்’ படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள போதும், தன்னை விஜய் ரசிகை என்று சொல்லிக் கொள்வதில் கீர்த்தி சுரேஷுக்கு தனி பெருமை உண்டு. எனவே தான் இந்த ஆண்டு என்ன மாதிரியான வாழ்த்து செய்தியை வெளியிடப்போகிறார் என ரசிகர்கள் காத்திருந்தனர். அப்படி மரண வெயிட்டிங்கில் காத்திருந்தவர்களை குஷியாக்கும் விதமாக, இந்த வருடம் விஜய் பிறந்தநாளுக்கு தனக்கு பிடித்தமான ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கே செம்ம உற்சாகமுடன் நடனமாடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் நடனமாடிய இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அதே சமயத்தில், விஜய் படத்தில் நடித்த மற்றொரு நடிகையும் அசத்தலாக தளபதி பாட்டுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களை மனம் கவர்ந்த அம்ரிதா ஐயர் தான் அது. மாஸ்டர் பட பாடலுக்கு குட்டை பாவாடையில் துள்ளலாக நடனமாடி ரசிகர்களை வசீகரித்திருக்கிறார். இந்த இரண்டு வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.