
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்-காக வலம் வருகிறார். இவரை வைத்து படம் இயக்க, பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். இவை அனைத்திற்கும் காரணம் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தான். இந்நிலையில் விஜய் இன்று தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ரசிகர்கள் பலர் அவரது வீட்டு முன் கூடிய நிலையில் விஜய்யை பார்க்காமலேயே ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
தங்களது பிறந்தநாளை கொண்டாடாத ரசிகர்கள் கூட தனக்கு பிடித்த நடிகர்களின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்கள். அதே போல் பிறந்தநாள் அன்று தனக்கு பிடித்த நடிகரின் முகத்தை ஒருமுறையாவது பார்க்கமுடியுமா? என்கிற ஆவலோடு பிரபலங்களின் வீடுகளின் முன்னே கூடுவதும் வழக்கம். அதே போல் இது போன்ற நாட்களில் பிரபலங்கள் வீடுகளில் இப்படி தவிர்த்து விட்டு குடும்பத்துடன் வெளியில் எங்காவது செல்வத்தையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நீலாங்கரை கேஷ்சுரினா டிரைவ் சாலையில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் பலர் கூடினர். பல மணிநேரம் விஜய்யை ஒரு முறையாவது தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும் என காத்திருந்தனர். கையில் கேக் மற்றும் பரிசுகளோடு பெண் ரசிகர்கள் முதல்கொண்டு காத்திருந்த நிலையில், அங்கு விரைந்து வந்த... காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் இயக்க பொறுப்பாளர் சரவணன் தளபதி விஜய் வீட்டில் இல்லை என ரசிகர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பினார்.
ஏமாற்றத்துடன் சில ரசிகர்கள் வீட்டு வாசல் முன்பே காத்திருந்தாலும், சிலர்... வீட்டின் கேட் முன்பே கேக் வெட்டி தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, அந்த கேக்கை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். பல மணி நேரம் தளபதியை பார்க்க வேண்டும் என காத்திருந்தும் அது முடியாமல் போக ஏமாற்றத்துடன் ரசிகர்கள் திரும்பி சென்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.