தாய்மொழியை புறக்கணிப்பது சரியா? புதிய சர்ச்சையில் சிக்கிய விஜய்..!

By manimegalai aFirst Published Jun 22, 2021, 2:35 PM IST
Highlights

தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும் 65 ஆவது படத்தின் தலைப்பு மற்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் இரண்டும் சுமார் 6 மணிநேர வித்தியாசத்தில் வெளியிடப்பட்டது. தளபதியின் பிறந்தநாளை இந்த கூடுதல் மகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தளபதி தாய் மொழியை புறக்கணிப்பதாக, பிரபல அரசியல் பிரமுகர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று வெளியான தளபதி விஜய் நடிக்கும் 65வது திரைப்படத்திற்கு ’பீஸ்ட்’ என நேற்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்ததை தொடர்ந்து, ரசிகர்கள் திரை உலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டைட்டிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை என கூறி, வைக்கும் படக்குழுவினருக்கு தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இந்த போஸ்டர், இது ஒரு வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம் என்பதையும் உறுதிப்படுத்தியது.

தற்போது  ’பீஸ்ட்’ பட டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னியரசு தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். இதற்க்கு முன் விஜய் நடிப்பில் வெளியான, பிகில், மாஸ்டர் ஆகிய படங்களையும் சுட்டி காட்டி தன்னுடைய கண்டனத்தை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வன்னியரசு பதிவிட்டுள்ளதாவது... "நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து ’பீஸ்ட்’ என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்'. இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு இவரது கேள்விக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

விஜய்யின் பிறந்தநாளின் 'பீஸ்ட்' படத்தின் டைட்டல் சர்ச்சை மட்டும் அல்லது, தாய் மொழியை விஜய் புறக்கணிப்பதாக கூறப்படுவதால்... இந்த படத்தின் டைட்டில் மாற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய்மொழியான மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ?Master, Bigil,படங்களை தொடர்ந்து
என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? pic.twitter.com/VoqtagIqDY

— வன்னி அரசு (@VanniArasu_VCK)

click me!