வாயில் தோட்டா... கையில் துப்பாக்கியோடு பொறி பறக்கவிடும் விஜய்! பட்டையை கிளப்பும் 'பீஸ்ட்' செகண்ட் லுக்..!

Published : Jun 22, 2021, 11:47 AM IST
வாயில் தோட்டா... கையில் துப்பாக்கியோடு பொறி பறக்கவிடும் விஜய்! பட்டையை கிளப்பும் 'பீஸ்ட்' செகண்ட் லுக்..!

சுருக்கம்

சன் பிக்சர்ஸ் நிறுத்திவனம் தயாரிப்பில், தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் விஜய்யின் 47 வது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்ட நிலையில், 2nd லுக் அதிகாலை 12 மணிக்கு வெளியானதை தொடர்ந்து, மற்றொரு தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது.  

'பீஸ்டின்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி விஜய், வெள்ளை நிற பனியன் அணிந்து கையில் துப்பாக்கியுடன்... ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது போன்றும், புகை கேன்கள் காற்றில் தூக்கி எறியப்பட்டது போன்றும் சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது. முதல் போஸ்டர் வைரலாக பார்க்கப்பட்ட நிலையில்...  இரண்டாவது லுக் பற்றி வெளியான தகவலை தொடர்ந்து இதன் மீதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே இரண்டாவது லுக்கும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இயக்குனர் நெல்சன் இதுவரை இல்லாத அளவிற்கு தன்னுடைய படங்களில் ஆக்ஷன் காட்சிகளில்  விஜய்யை வைத்து மிரட்ட தயாராகியுள்ளது தெரிகிறது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது லுக்கில், பொறிபறக்கும் நெருப்பு, பறக்கும் ஹெலிகாப்டருக்கு கீழ் நின்று...  வாயில் துப்பாக்கி தோட்டாவை வைத்தபடி, துப்பாக்கியை லோட் செய்வது இடம்பெற்றுள்ளது. 

தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த இரண்டு போஸ்டர்களுமே... ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், அதை தொடர்ந்து தளபதி 'பீஸ்ட்' படமும், வேறு லெவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்