நல்ல படம் கொடுத்தா பாராட்டுறாங்க.. மோசமான படம் கொடுத்தா கழுவி ஊத்துறாங்க! 'மாநாடு' எப்படி.. சிம்பு கூறிய பதில்

By manimegalai aFirst Published Jun 22, 2021, 4:59 PM IST
Highlights

இந்தப்பாடல் உருவான விதம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நாயகன் சிம்பு,  ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாக கலந்துரையாடல் மூலம் பகிர்ந்துகொண்டனர். 

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர்,  டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மதன் கார்க்கியின் வரிகளில் யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு,  கே எல் பிரவீண் எடிட்டிங், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர். உடையலங்காரம் மற்றும் ஸ்டைலிங் ஏரியாவை மெருகூட்டியுள்ளார் வாசுகி பாஸ்கர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப்படத்தின் ’மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. இப்போது பாடல் வைரலாகி வருகிறது. 

இந்தப்பாடல் உருவான விதம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நாயகன் சிம்பு,  ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாக கலந்துரையாடல் மூலம் பகிர்ந்துகொண்டனர். 

சிம்பு பேசும்போது, “வெங்கட்பிரபு எப்பவுமே கதை சொல்ல மாட்டாரு.. மாநாடு படத்தை பத்தி ஒரு ஐடியா மட்டும் சொன்னாரு.. அது கேக்கவே வித்தியாசமா இருந்துச்சு.. வெங்கட்பிரபு விளையாட்டான ஆளு.. ஆனா இந்தப்படம் பார்த்ததும் நீங்க தான் இந்த படத்தை எடுத்தீங்களான்னு அவர்மேல ஆச்சர்யம் வரும்.. கல்யாணி சூட்டிங் ஸ்பாட்டுல ஏகப்பட்ட கேள்வி கேட்பாங்க.. அவங்க சினிமா குடும்பத்துல இருந்து வந்தவங்க.. சினிமா பத்தி தெரியும்னாலும் இன்னும் நிறைய கத்துக்க விரும்புறாங்க.. எஸ்ஜே சூர்யா ஒய்.ஜி.மகேந்திரன் ரெண்டு பேரும் சேர்ந்து சும்மா கிழிச்சிருக்காங்க.. அவங்க நடிச்சதை பார்த்து எனக்கே டயலாக் மறந்து போய் நின்னுட்டேன்.. நான் பண்ற டென்சனுக்கு எஸ்ஜே.சூர்யா காட்டுற ரியாக்சனுக்கு தியேட்டர்ல ரசிகர்கள் என்ன மாதிரி ரியாக்சன் காட்டுவாங்கன்னு பாக்குறதுக்கு ஆவலா இருக்கேன்.. இந்தப்படத்தை தியேட்டர்ல பாக்குற ரசிகர்கள், படம் முடிஞ்சதும் அப்படியே எஸ்ஜே சூர்யாவை தூக்கிட்டு போயிருவாங்க..

இந்தப்படம் ஏன் தள்ளிப்போச்சுன்னு தெரியல.. ஆனா அந்த நேரத்துல பண்ணியிருந்தா கூட இவ்வளவு சரியா வந்திருக்காதுன்னு தான் சொல்வேன்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்வளவு நாள் பொறுமையா இருந்து இந்தப்படத்தை முடிச்சிருக்கார்னா உண்மையிலேயே பெரிய விஷயம்.

இந்தப்படத்துல சிங்கிள் ஷாட்டுல ஒரு காட்சியில நடிச்சிருக்கேன்.. இதுக்கு முன்னாடி மன்மதன் படத்துல மொட்டை மதன் கேரக்டர் அழுதுக்கிட்டே பேசுற மாதிரி காட்சில தான் அப்படி சிங்கிள் டேக்ல நடிச்சேன்.. சின்ன வயசுல நடிக்கிறப்ப எனக்கு அழுகை வரணும்னா என்னோட தொடைல சுரீர்னு அடிக்கணும். ஆனா இப்ப அந்த காட்சிக்குள்ள போயிட்டா தன்னால அழுகை வருது.. காட்சி முடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சு கூட அழுகைய நிப்பாட்ட முடியலை...

நல்ல படம் கொடுத்தா மக்கள் பாராட்டுறாங்க.. மோசமான படம் கொடுத்தா கழுவி ஊத்துறாங்க.. இந்த மாநாடு படத்தை பார்த்துட்டு இவ்வளவு சுவாரஸ்யமா ஒரு விஷயத்தை சொல்லிருக்காங்களேன்னு அந்த வேலைக்கு மரியாதை கொடுப்பாங்க.. யுவன் தனித்தனி ஆல்பமும் பண்ணனும். பாலிவுட்ல அது ரொம்பவே ஹிட் ஆகியிருக்கு.. இதுதான் கரெக்ட் டைம்.” என கூறினார்.

 

click me!