
துள்ளுவதோ இளமை மற்றும் காதல் கொண்டேன் ஆகிய இரு திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 2006 ஆம் ஆண்டு மீண்டும் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் அவருக்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பிறகு பொல்லாதவன் திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பு அளித்த நிலையில் முழுக்க முழுக்க கமர்சியலாக வெளியான திரைப்படம் தான் "யாரடி நீ மோகினி" என்கின்ற திரைப்படம். நடிகை நயன்தாராவுடன், தனுஷ் அவர்கள் இணைந்து நடித்த முதல் திரைப்படம் அது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பிரபல நடிகர் ரகுவரன் அவர்களுடைய நடிப்பில் உருவான ஒரு திரைப்படம் அது.
நடிகர் மம்முட்டியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
இந்த படத்தில், தளபதி விஜயின் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரபல நடிகை சரண்யா மோகனும், நயன்தாராவின் தங்கையாக நடித்திருப்பார். அப்போது அவருக்கு வயது வெறும் 19.
இந்நிலையில் யாரடி நீ மோகினி திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தனது சக நடிகையான சரண்யா மோகன் அவர்களை பாராட்டி பேசிய நடிகர் தனுஷ், அவர் ஒரு சிறந்த நடிகர், பாசில் கண்டுபிடித்த ஒரு சிறந்த நடிகை என்றெல்லாம் புகழ்த்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது, தனுஷ் பேசுவதை குறுக்கிட்டு நன்றி கூறிய சரண்யா மோஹனை, ஏய் வாய மூடு என்று கூறி சட்டென்று கலாய்த்திருக்கிறார் தனுஷ். அருகில் இருந்த அனைவரையும் சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்திய தனுஷின் அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Vijay Antony Movie: விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.