
சீனாவில் துவங்கி, அமெரிக்கா, இத்தாலி, என வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தி , தற்போது இந்தியாவிலும் தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டி வருகிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், மக்களை காப்பற்ற மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? முதல்வரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்! ஐடி ரெய்டு பற்றி பேசிய ஆப்பு வாங்கிய சோகம்!
ஏற்கனவே ஏப்ரல் மாதத்தோடு முடிவடைவதாக இருந்த ஊரடங்கு உத்தரவை தற்போது, மே 3 ஆம் தேதி வரை நீடித்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மேலும் சில தினங்களுக்கு ஊரடங்கை நீடிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சற்றும் எதிர்பாராத இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக, கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டி வந்த பலர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முடிந்தவரை உணவு மற்றும் அடிப்படை உதவிகள் எந்த சிரமம் இன்றி கிடைத்திட, அரசாங்கம் ஒருபுறம் உதவி வந்தாலும், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உதவி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்.. கல்லூரி நாட்களில் இப்படித்தான் இருந்தாரா தளபதி! இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம்!
அதே நேரத்தில் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்தியாவில் கோரோனோ பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, பாரத பிரதமர் மோடியின் கொரோனா தடுப்பு பணிக்கும், முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பு பணிக்கும் தொடர்ந்து நிதி வழங்கி வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் பல பிரபலங்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் நிதியை அறிவித்து வருகிறார்கள், அந்த வகையில் ஏற்கனவே பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி வழங்கினார். அதை தொடர்ந்து மும்பை மாநகராட்சியின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்கினார்.
மேலும் செய்திகள்: குழந்தை பெற்றதும் ஓவர் ஸ்லிம்மாக மாறிய ஆல்யா மானசா! எடுப்பா போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் செம்பா!
மொத்தம் 28 கோடி நிதி அவர் வழங்கிய நிலையில், தற்போது மேலும் 2 கோடி உதவி வழங்கியுள்ளார். அதாவது, சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பை போலீஸ் காவலர்களான சந்திரகாந்த் பென்டூர்கர் மற்றும் சந்தீப் சர்வ் ஆகிய இருவர் மரணம் அடைந்தனர்.
மக்கள் பணி செய்து உயிர் நீத்த இந்த காவலர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் மும்பை போலீஸ் பவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார் அக்ஷய் குமார்.
இவரின் இந்த உதவிக்கு மும்பை போலீஸ் கமிஷனரான பரம்பீர் சிங் நடிகர் அக்ஷய் குமாருக்கு தன்னுடியா நன்றிகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின்... இதுவரை பார்த்திராத அழகு புகைப்படங்கள்!
தொடர்ந்து, பல்வேறு உதவிகளை அறிவித்து வரும் நடிகர் அக்ஷய் குமாருக்கு பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.