வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்.. கல்லூரி நாட்களில் இப்படித்தான் இருந்தாரா தளபதி! இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம்!

By manimegalai a  |  First Published Apr 28, 2020, 7:37 PM IST

தளபதி விஜய் தன்னுடைய கல்லூரி நாட்களில், நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட, புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில் தளபதி மிகவும் வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்கில் காட்சியளிக்கிறார்.
 


தளபதி விஜய் தன்னுடைய கல்லூரி நாட்களில், நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட, புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில் தளபதி மிகவும் வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்கில் காட்சியளிக்கிறார்.

கோலிவுட் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர், தளபதி விஜய், தன்னுடைய அப்பா ஒரு இயக்குனர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. இதை தொடர்ந்து தன்னுடைய தந்தை இயக்கத்தில் கிட்ட தட்ட 10 படங்களில் நடித்தார்.

Tap to resize

Latest Videos

வெற்றி தோல்வி என மாறி, மாறி, இவர் சந்தித்திருந்தாலும்.... இவர் முன்னணி இடத்தை பிடிப்பதற்கு பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. விஜய் மட்டும் அல்ல எவ்வளவு பெரிய நடிகரின் வாரிசாக இருந்தாலும், இயக்குனரின் வாரிசாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்றால், அதற்கு அவர்களின் அன்பை பெற வேண்டும்.

மேலும் செய்திகள்: அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? முதல்வரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்! ஐடி ரெய்டு பற்றி பேசிய ஆப்பு வாங்கிய சோகம்!
 

அந்த வகையில் நடிகர் விஜய் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்று தான் கூறவேண்டும். தமிழ், மொழியை தாண்டி கூட இவர் பல ரசிகர்கள் உள்ளனர். இவரின் படம் எப்போது வெளியாகும், என்றும் இவர் படம் குறித்த அறிவிப்புகள் எப்போது வெளிவரும் என்றும் , காத்திருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருப்பது, இயக்குக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, மாஸ்டர் படத்திற்கு தான். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற நிலையில், படம் வெளியாவதில் கொரோனா ஊரடங்கு காரணமாக சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது.

தளபதியின் இப்போதைய புகைப்படங்களை, ரசிகர்கள் அதிக அளவில் பார்த்திருந்தாலும், அவரை பழைய புகைப்படங்களை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

மேலும் செய்திகள்: குழந்தை பெற்றதும் செம்ம ஸ்லிம்மாக மாறிய ஆல்யா மானசா! எடுப்பா போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் செம்பா!
 

அந்த வகையில், தற்போது விஜய் லயோலா கல்லுரியில் படித்தபோது, அவருடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படடகத்தில், விஜய் மற்றவர்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமாக உடை அணிந்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ...

click me!