வாவ்...வாட்டர் கிராசிங்கில் மாஸ் காட்டும் அஜித்..வைரலாகும் சூப்பர் தூள் வீடியோ

By Kanmani P  |  First Published Sep 5, 2022, 9:16 PM IST

கார், பைக் ரேஸ்களில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார் வாட்டர் கிராசிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரு படங்களும் கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றிருந்தது. முன்னதாக நேர்கொண்ட பார்வை அதைத்தொடர்ந்து வலிமை என இரண்டு படங்களிலும் ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் கூட்டணி அமைத்திருந்தார் அஜித். இதில் வலிமை இந்த வருட துவக்கத்தில் வெளியாகி சுமாரான வசூலை தான் பெற்றிருந்தது. இருந்த போதிலும் தனது மூன்றாவது படத்தையும்  அந்த கூட்டணியிலேயே அமைத்துக் கொண்டார் அஜித். அதன்படி தற்போது அஜித் 61 படம் தயாராகி வருகிறது.

சென்னை மவுண்ட் ரோடு போன்ற செட் ஹைதராபாத்தில் உள்ள சினிமா நகரத்தில் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. வங்கி கொள்ளை தொடர்பான கதைக்களத்தை இந்த படம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதோடு இதில் அஜித் இரு வேறு தோற்றங்களில் நடிக்க உள்ளாராம். ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...வேட்டைக்கு ரெடியான கமல்..வெளியானது பிக்பாஸ் 6 மிரட்டல் ப்ரோமோ

முன்னதாக படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த விடுமுறை நாட்களில் உலகை சுற்றிப் பார்க்க சென்றிருந்தார் அஜித் குமார். அதன்படி ஐரோப்பிய நாடுகளை தனது பைக் பயணத்தின் மூலம் சுற்றிப் பார்த்த அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதோட அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் டிரெண்டாகி வந்தது. பின்னர் லண்டனுக்கு சென்ற அஜித்தின் ரசிகர் சந்திப்பும் சமூக வலைதளத்தில் பரவிக் கிடந்தது.

மேலும் செய்திகளுக்கு...முதல் சிங்கிள் போஸ்டருடன் ட்விஸ்ட் வைத்த தனுஷ்...இரண்டாவது ராஜாவை தேடும் ரசிகர்கள்

தற்போது நடிகர் அஜித்துடன் மஞ்சுவாரியரும் இணைந்து பைக் ரைடிங் செய்த புகைப்படங்களும் வெளியாகி வரும் நிலையில், அவர் சென்ற பைக்கிற்கு இன்சூரன்ஸ் கிடையாது என்கிற தகவல் பரவியது. இதை பார்த்து நெட்டிசன்கள் இன்சூரன்ஸ் இல்லாத பைக்கிலா அவர் வலம் வந்தார் என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறு சமூக வலைதளத்தில் அஜித் குறித்து செய்தி பரவி வரும் நிலையில், கார், பைக் ரேஸ்களில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார் வாட்டர் கிராசிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...சீரியலில் மட்டுமல்ல ரியலிலும் ராஜா ராணி 2 குடும்பத்தில் திருமணம்.. நடிகருக்கும் குவியும் வாழ்த்து

water crossing! pic.twitter.com/bYlI7RTnwi

— Suprej Venkat (@suprej)
click me!