நடிகர் அர்ஜுன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்

Published : Jul 23, 2022, 03:01 PM ISTUpdated : Jul 23, 2022, 04:27 PM IST
நடிகர் அர்ஜுன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்

சுருக்கம்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அர்ஜுனின் தாயார் லக்‌ஷ்மி தேவம்மா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 85. 

தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் கிங் என அறியப்படுபவர் அர்ஜுன். கன்னட நடிகர் ஷக்தி பிரசாத்தின் மகனான இவர் முதலில் கன்னட படங்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். குறிப்பாக இவர் நடித்த ஆக்‌ஷன் படங்களுக்கு தமிழில் அதிக வரவேற்பு இருந்தன.

அர்ஜுன் படங்களில் நடித்தது மட்டுமின்றி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் கூட இவர் சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளராகவும் அசத்தினார். தற்போது சில படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் அர்ஜுன்.

இதையும் படியுங்கள்... இதுவே ஒரு பெண் செய்திருந்தால்..? ரன்வீர் சிங் நியூடு போட்டோ ஷூட் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் தாயார் லக்‌ஷ்மி தேவம்மா இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 85. உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தாயாரை இழந்து வாடும் நடிகர் அர்ஜுனுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். அர்ஜுனின் தாயார் லக்‌ஷ்மி தேவம்மா ஸ்கூல் டீச்சராக பணியாற்றியவர் ஆவார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நடிகர் அர்ஜுன் இவருக்கு பிறந்த இரண்டாவது மகன் ஆவார். லக்‌ஷ்மி தேவம்மாவின் மறைவால் அர்ஜுனின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்... ரேகா நாயரின் ஆபாச பேச்சால் அப்செட் ஆன பார்த்திபன்.... பீச் மோதலுக்காக பயில்வானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!