பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் அமீர்கான், இவரது மகளின் திருமணம் உதய்பூரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா திரைப்படம் படு தோல்வி அடைந்ததால், சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துள்ள அமீர்கான், தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவரது தாயாருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தான் தங்கி இருந்தார் அமீர்கான்.
இந்த நிலையில், கடந்த வாரம் அமீர்கான் மகள் இரா கானுக்கு கடந்த வாரம் மும்பையில் திருமணம் நடைபெற்றது. அவர் தனது நீண்ட நாள் காதலனான நுபூர் ஷிக்கர் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்தார். இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்று உதய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... உஷார் மக்களே... அமலா ஷாஜியை நம்பி நடுத்தெருவுக்கு வந்த பாலோவர் - இன்ஸ்டாவில் இப்படி ஒரு நூதன மோசடி நடக்குதா?
இதில் அமீர்கானின் குடும்பத்தினர் மற்றும் திரையுலக நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இரா கான் தனது கணவர் நுபூருக்கு மோதிரம் மாற்றி முத்தமிட்டதை பார்த்த அமீர்கான் எமோஷனல் ஆகி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். அப்போது அவரது முன்னாள் மனைவி ரீனா தத்தா அருகில் இருந்தார். இதுகுறித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
Papa Aamir Khan Sheds Happy Tears as Ira gets Married🥹 pic.twitter.com/1GCL2o17Jj
— Bollywood Machine (@BollywoodMachin)அதேபோல் மற்றொரு வீடியோவில் நடிகர் அமீர்கானும், அவரது முன்னாள் மனைவி ரீனா தத்தாவும் சேர்ந்து தங்கள் மகள் இரா கான், மகன் ஜுனைத் மற்றும் மருமகன் நுபூர் ஆகியோர் உடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவில் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
and wedding Ceremony 💞🥰 pic.twitter.com/irhapP6qUj
— Sudha Ajmera (@SudhaAjmera13)இதையும் படியுங்கள்... எதிர்பாராததை எதிர்பாருங்கள்... பிக்பாஸில் மீண்டும் ஒரு Mid Week Eviction - அவுட் ஆகப்போகும் அடுத்த நபர் இவரா?