
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை முற்றிலும் நீக்க மத்திய, மாநில அரசுகள் தீயாய் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக ஊடகங்கள் மூலம் மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி அவர்கள்,கடந்த 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் நமக்காக உயிரையும் பணயம் வைத்து உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்று மாலை 5 மணிக்கு கைதட்டி ஒலி எழுப்ப கூறியிருந்தார்.
இதையும் படிங்க: தீயாய் பரவிய திருமண வதந்தி... காதலரை பிரிந்த அமலா பால்...??
பிரதமர் சொன்னபடி ஊரடங்கை முறையாக கடைபிடித்த மக்கள், சரியாக 5 மணிக்கு வீட்டு வாசல், பால்கனி, சாலை என அனைத்து இடங்களிலும் கூட்டம் கூட்டமாக கூடி நின்று கைதட்டியும், மணியோசை எழுப்பியும் தங்களது நன்றியை தெரிவித்தனர். சில இடங்களில் கொண்டாட்ட மனநிலையில் ஒன்றிணைந்த ஏராளமான மக்கள் தங்களது நன்றியை கைதட்டி வெளிப்படுத்தினர். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அவை விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் ஒன்றாக கொண்டு வந்தன.
இதையும் படிங்க: அஜித்திற்கே தல சுற்றவைத்த தளபதி...“பிகில்” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் செய்த மாஸான காரியம்... வைரலாகும் வீடியோ...!
இந்நிலையில் இதுகுறித்து ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் ட்வீட் செய்திருக்கிறார். அதில், “போராட வர சொன்னால் வீட்டில் இருந்துக்கொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது.” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.