7 தேசிய விருதுகள் பெற்ற பிரபல இயக்குனர் காலமானார்..!

By manimegalai aFirst Published Jun 11, 2021, 12:23 PM IST
Highlights

இதுவரை 7 தேசிய விருதுகளை வாங்கி, மிகவும் பிரபலமான மேற்கு வங்கத்தை சேர்ந்த  பிரபல இயக்குனர் புத்தாதேவ் தாஸ்குப்தா உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.
 

இதுவரை 7 தேசிய விருதுகளை வாங்கி, மிகவும் பிரபலமான மேற்கு வங்கத்தை சேர்ந்த  பிரபல இயக்குனர் புத்தாதேவ் தாஸ்குப்தா உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்: ஜொலிக்கும் உடை... பிளாக் ஹாட் பட்டர் ஃபிளை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!
 

78 வயதாகும் இயக்குனர்  புத்தாதேவ் தாஸ்குப்தா, 1968 ஆம் ஆண்டு வெளியான 'சமயர் காசே' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அன்றில் இருந்து இப்போது வரை 25 திற்கும் குறைவான படங்களை மட்டுமே இயக்கி பிரபலமானவர். இவர் இயக்கிய படங்களில் 7 படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது. மேலும் மற்ற படங்களும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. மேற்கு வாங்க திரையுலகில் மிக சிறந்த இயக்குனராக அறியப்பட்ட இவர், பல இளம் இயக்குனர்களுக்கும் ரோல் மாடலாக பார்க்கப்பட்டவர்.

மேலும் சமூக அக்கறை கொண்ட பல்வேறு டாகுமெண்டரி படங்களை எடுத்து பிரபலமாகியுள்ளார். இவரது டாகுமெண்டரிகளும் பல்வேறு விருதுகளை பெற்றவையே ஆகும். கடைசியாக இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு Urojahaj  என்கிற படத்தை இயக்கி இருந்தார்.

மேலும் செய்திகள்: பாபா பாஸ்கர் மகளுக்கு நடந்த சடங்கு நிகழ்ச்சி..! கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு..!
 

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் காலமாகி விட்டதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு மேற்க வந்த திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காரணம் இவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களுமே மிகவும் சிறப்பான கதையம்சத்தை கொண்ட படங்கள் தான். இவரது மறைவிற்கு மேற்கு வாங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உட்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!