நடிகர் நிதீஷ் வீரா மறைவால் கீர்த்தி சுரேஷ் படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்..!

Published : Jun 11, 2021, 11:02 AM ISTUpdated : Jun 11, 2021, 11:04 AM IST
நடிகர் நிதீஷ் வீரா மறைவால் கீர்த்தி சுரேஷ் படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்..!

சுருக்கம்

கொரோனா கடந்த மாதம் உயிரிழந்த பிரபல நடிகர் நிதீஷ் வீராவின் மறைவால், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

கொரோனா கடந்த மாதம் உயிரிழந்த பிரபல நடிகர் நிதீஷ் வீராவின் மறைவால், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கொரோனாவின் முதல் அலையில் அசால்டாக இருந்தவர்களை கூட ஆட்டம் காண வைத்துவிட்டது கொரோனாவின் இரண்டாவது அலை எனலாம். சிறிய அளவிலான அறிகுறி தென்படும் போதே, உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரே போய் விடும் என்கிற நிலை உருவாகியுள்ளது. எனவே பிரபலங்கள், தொழிலதிபர்கள், பாமர மக்கள் என அனைவருமே, அச்சத்தில் உறைந்துள்ளனர். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, மற்றும் சுகாதாரத்தோடு இருப்பது தான் இந்த தொற்றில் இருந்து நம்மை பாதுக்காக்கும்.

மேலும் மத்திய - மாநில அரசுகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.  தடுப்பூசிகள் போதுமான அளவில் கிடைக்காததும் புதிய பிரச்சனையாக பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனாவில் இருந்து மக்களை காக்க அரசு போராடி வருகிறது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலர், மருத்துவர்களின் முறையான சிகிச்சையால் அதில் இருந்து மீண்டு வந்தாலும்... எதிர்பாராத விதமாக சில உயிரிழப்புகளும் நேர்கிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு கடத்த மாதம், புதுப்பேட்டை, அசுரன், காலா, உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிதீஷ் வீரா உயிரிழந்தார். முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து வந்த இவரது இழப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவர் உயிரிழப்பால் கீர்த்தி சுரேஷ், இயக்குனர் செல்வராகவனுடன் நடித்து வரும் 'சாணிக்காகிதம்' படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'அசுரன் ' படத்தை தொடர்ந்து நிதீஷ் வீரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்ததாகவும், கிட்ட தட்ட அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் பாதி நிறைவடைந்துவிட்ட நிலையில், மீதம் உள்ள காட்சிகளை எடுப்பதற்கும் கொரோனா இரண்டாவது அலை தலைதூக்க படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளதால் படக்குழு புதிய பிரச்சனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே மீதம் உள்ள காட்சிகளை படமாக்குவதற்கு முன்பாக மற்ற நடிகரை வைத்து நிதீஷ் வீரா நடித்த காட்சிகளை, படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

முத்துவுக்கு வில்லியாக மாறும் மீனா... கிரிஷை பகடைக்காயாக யூஸ் பண்ணும் ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்
அறிவுக்கரசியின் பிளானை வாஷ் அவுட் பண்ணிய தர்ஷினி... முல்லைக்கு விழுந்த தர்ம அடி - எதிர்நீச்சல் தொடர்கிறது