
நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது, காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஏன் அந்த பத்திரத்தை கொடுக்க முடியவில்லை என பதில் கொடுத்துள்ளார்.
விஷாலின் இந்த புகாருக்கு ஆர்.பி.செளத்ரி தரப்பில் இருந்து தெரிவிக்க பட்டுள்ளதாவது, நடிகர் விஷால்... இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்த 'இரும்புத்திரை' படத்திற்காக, என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் கடன் பெற்றார். அது தொடர்பான ஆவணங்கள், ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமாரிடம் இருந்தது. கடன்கள் பற்றிய விஷயங்களை அவர் தான் கவனித்து வந்தார்.
அதே நேரத்தில், விஷால் கடனை திருப்பி கொடுக்கும் போது அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் பொறுப்பில் இருந்த ஆவணங்களை எங்கு வைத்தார் என்பது தெரியாததால் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பி தந்த போது, அதனை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையொப்பம் போட்டு கொடுத்துள்ளேன். ஆனால் ஒருவேளை தொலைந்த ஆவணங்கள் கிடைத்தால் அவருக்கு எங்கள் தரப்பில் இருந்து பிரச்சனை வருமோ என்கிற பயத்திலேயே இந்த புகாரை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தற்போது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சென்னையில் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்து, சென்னை திரும்பிய பின்னர் காவல் நிலையத்தில் முறையாக பலதிலளிப்பார் என அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.