'68-வது தேசிய விருதுகள்' 10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா..! முழு விவரம் இதோ...

By manimegalai a  |  First Published Jul 22, 2022, 8:05 PM IST

மொத்தம் 305 பிராந்தி மொழி படங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில், 150 படங்கள் திரைப்படம் இல்லாத பிரிவுகளில் போட்டியிட்டன. இவற்றில் தற்போது 10 விருதுகளை தமிழ் சினிமா தட்டி சென்றுள்ளது.
 


இந்திய அரசு ஒவ்வொரு வருடமும், நாடு முழுவதும் வெளியான மிகச்சிறந்த படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்து, விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன புது தில்லியில் அறிவிக்கப்பட்டன.

மொத்தம் 305 பிராந்தி மொழி படங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில், 150 படங்கள் திரைப்படம் இல்லாத பிரிவுகளில் போட்டியிட்டன. இவற்றில் தற்போது 10 விருதுகளை தமிழ் சினிமா தட்டி சென்றுள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: இது தான் உங்கள் பிறந்த நாள் பரிசு..! இந்திய அளவில் #SooraraiPottru ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த 10 தேசிய விருதுகள்:

*சிறந்த திரைப்படம் சூரரைப் போற்று
*சிறந்த நடிகர் (சூர்யா) சூரரைப் போற்று 
*சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி) சூரரைப் போற்று 
*சிறந்த துணை நடிகை (லட்சுமி பிரியா சந்திரமௌலி) சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்
*சிறந்த பின்னணி இசை (ஜீவி பிரகாஷ் குமார்) சூரரைப் போற்று
* சிறந்த திரைக்கதை (ஷாலினி உஷா நாயர், சுதா கங்கோரா) சூரரைப் போற்று
*சிறந்த திரைக்கதை (மடோன் அஸ்வின்) மண்டேலா
*சிறந்த தமிழ் திரைப்படம் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்
* சிறந்த அறிமுக இயக்குனர் (மடோன் அஸ்வின்) மண்டேலா
*சிறந்த படத்தொகுப்பு (ஸ்ரீகர் பிரசாத்) சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

மேலும் செய்திகள்: ஷேம்.. ஷேம்... பாத்ரூமில் குளித்துக்கொண்டே போஸ் கொடுத்த மியா கலிஃபா..! கவர்ச்சியை அள்ளிக்கொட்டிய போட்டோஸ்!

அதிக பட்சமாக சூர்யாவின் 'சூரரை போற்று' திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளதை தொடர்ந்து, சூர்யாவின் ரசிகர்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் தொடர்ந்து சூர்யாவுக்கும் அவரது படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே போல், மண்டேலா படக்குழுவினர் மாற்று சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் படக்குழுவினருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

click me!