Rajinikanth: தலைவா இந்த ஒரு வார்த்தை போதாதா... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள.. வைரல் வீடியோ..!

Published : Oct 25, 2021, 04:30 PM ISTUpdated : Oct 25, 2021, 04:38 PM IST
Rajinikanth: தலைவா இந்த ஒரு வார்த்தை போதாதா... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள.. வைரல் வீடியோ..!

சுருக்கம்

கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) 'தாதா சாகேப் பால்கே' (dadasaheb phalke award) விருது வழங்கப்பட்டுள்ளது, மட்டும் இன்றி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷும்,(Dhanush)  சிறந்த இயக்குனருக்கான விருதை வெற்றிமாறனுக்கு, (Vetrimaran) சிறந்த படத்திற்கான விருதை தாணுவும், அசுரன் படத்திற்காக பெற்றுள்ளனர். அதே போல் விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை 'சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக பெற்றுள்ளார்.

கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டுள்ளது, மட்டும் இன்றி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷும், சிறந்த இயக்குனருக்கான விருதை வெற்றிமாறனுக்கு, சிறந்த படத்திற்கான விருதை தாணுவும், அசுரன் பணத்திற்காக பெற்றுள்ளனர். அதே போல் விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை 'சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்:என்னை தேசத்துரோகியாக விமர்சித்தது தவறு... நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்திற்கு பதில்! வழக்கை ஒத்திவைத்த நீதிபதி!

ஏற்கனவே இந்த விருது பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில்,  இன்று டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடந்தது. இதில்  மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை குடியரசு தலைவர் வெங்கையா  நாயுடு விருது பெற்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அதற்கான சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.  67-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தனர்.

கடந்த  2019-ஆம் ஆண்டு, தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக விருது வழங்கும் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்,  45 ஆண்டுகால திரையுலக பயணத்தை கௌரவிக்கும் விதமாக, தாதா சாஹேப் பால்கி விருது வழங்கப்பட்டது. மருமகனுடன் ரஜினிகாந்தும் தன்னுடைய குடும்பத்துடன் வந்து விருது பெற்றார். மேலும் பலர் தொடர்ந்து, ரஜினிகாந்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்:ஷாருகான் மகன் ஆர்யன் விடுதலைக்கு ரூ.25 கோடி பேரம்..? சாட்சியாளரின் பகீர் வாக்குமூலத்தால் பரபரப்பு..!

மேலும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்படுள்ளது. 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்னே ' பாடலுக்கு இசையமைத்ததற்காக, இசையமைப்பாளர் இமான் சிறந்த பாடல் இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த ஜூரி மற்றும் ஒளிப்பதிவுக்கான விருது, பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த 'ஒத்த செருப்பு' படத்திற்கு வழங்கப்பட்டது.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , விருது விழாவில் பேசிய போது...  "தன்னை திரையுலகில் உருவாக்கிய இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு பால்கே விருதை அர்ப்பணிக்கிறேன் கூறி நெகிழ்ச்சியடைந்தார். பால்கே விருதை பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்றும். தன்னுடன் பணிபுரிந்த ஓட்டுனர் ராஜ்பகதூர், அவர்தான் எனது நடிப்புத்திறனை கண்டறிந்து ஊக்குவித்தார் என நண்பரின் நினைவுகளையும் நினைவு கூர்ந்தார். இதனை ஆங்கிலத்தில் பேசினாலும், இறுதியில் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என தமிழில் பேசி அரங்கத்தையே கை தட்டல்களால் அதிரவைத்தார். தலைவரின் இந்த ஒரே... வார்த்தையை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!