என்னை தேசத்துரோகியாக விமர்சித்தது தவறு... நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்திற்கு பதில்! வழக்கை ஒத்திவைத்த நீதிபதி!

Published : Oct 25, 2021, 01:44 PM IST
என்னை தேசத்துரோகியாக விமர்சித்தது தவறு... நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்திற்கு பதில்! வழக்கை ஒத்திவைத்த நீதிபதி!

சுருக்கம்

நடிகர் விஜய் (Vijay) தன்னுடைய சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து 50 சதவீதம் விளக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தனி நீதிபதியின் கருத்து தன்னை புண்படுத்தியதாக விஜய் உயர்நீதி மன்றத்திற்கு பதில் அளித்துள்ளார்.

 நடிகர் விஜய் தன்னுடைய சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து 50 சதவீதம் விளக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தனி நீதிபதியின் கருத்து தன்னை புண்படுத்தியதாக விஜய் உயர்நீதி மன்றத்திற்கு பதில் அளித்துள்ளார்.

தளபதி விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து,  காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை  விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா  நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தான், தானும் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்: ஷாருகான் மகன் ஆர்யன் விடுதலைக்கு ரூ.25 கோடி பேரம்..? சாட்சியாளரின் பகீர் வாக்குமூலத்தால் பரபரப்பு..!

மேலும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்  விசாரணைக்கு வந்தபோது, ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தான் முழுமையாக ஏற்பதாகவும், நீதிமன்றத்தை நாடியதற்காக விதித்த ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் தனி நீதிபதியின் விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் முன்வைத்தார்.

மேலும் செய்திகள்: இன்று தாதா சாகேப் பால்கே விருது பெரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! கொண்டாடும் ரசிகர்கள்..!

ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை றது செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும் விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை வணிகவரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும் என்றும் மீதமுள்ள 80 சதவீதத் தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், நடிகர் விஜய் நுழைவு வழியாக ரூபாய் 40 லட்சம் வரை செலுத்தியுள்ளதாக வணிகவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் எட்டு லட்ச ரூபாயையும், அதன்பிறகு 32 லட்ச ரூபாய் என முழுமையாக நுழைவுவரியை விஜய் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து தனி நீதிபதியின் கருத்தை நீக்க கோரி நடிகர் விஜய் உயர்நீதி மன்றத்திற்கு அளித்துள்ள பதிலில், "என்னை தேச விரோதியாச விமர்சித்து கருத்து கூறி இருப்பது தவறு என்றும், அந்த கருத்துக்கள் தன்னை புண் படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி  வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

LIK Day 3 Box Office : டிராப் ஆனதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல்? 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
முத்துவேல் மீது சக்திவேலுக்கு வந்த டவுட்... ராஜியிடம் பொய் சொன்ன கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்