
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் வா சாமி பாடலின் லிரிக்கல் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. வரும் 4ம் தேதி தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.
இந் நிலையில் இன்று மாலை அண்ணாத்த படத்தின் வா சாமி பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பாடல் லிரிக் வெளியிடப்பட்டு உள்ளது.
சாட்ட எடுத்துக்கிட்டு…. வேட்டி மடிச்சிகிட்டு… எதிரிய எருவென எரிடா… என பாடல் துவங்கியிருக்கிறது. அருண்பாரதி பாடலை எழுதி இருக்க, முகேஷ் முகமது, கீழக்கரை சம்சுதின், நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.