50 ஆவது நாளில்... விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சர்பிரைஸ்! வைரலாகும் வீடியோ..!

Published : Mar 04, 2021, 11:25 AM IST
50 ஆவது நாளில்... விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சர்பிரைஸ்! வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

நேற்றைய தினம் 'மாஸ்டர்' படத்தின் 50 ஆவது நாளை தளபதி ரசிகர்கள் பிரமாண்டமாக, போஸ்டர் அடித்து... தடபுடலாக கொண்டாடி வந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி  கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது. கொரோனா பீதியில் இருந்த மக்களை தியேட்டரை நோக்கி வரவைத்த பெருமை மாஸ்டர் படத்திற்கு கிடைத்தது. கடைசி நேரத்தில் தமிழக அரசு வழங்கிய 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட போதும், 50 சதவீத ஆக்குபன்ஸியில் படம் பட்டையைக் கிளப்பியது. 

மேலும் செய்திகள்: முன்னழகு... பின்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்..! ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆவது ராசா!
 

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வரும் மாஸ்டர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியான போதும், இருப்பினும் இன்னும் தமிழகத்தில் உள்ள சில திரையரங்கங்களில், 50 நாளை கடந்து ஓடி கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்: துப்பாக்கி சுடும் பயிற்சியில் தல அஜித்... மொட்டை தலை, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வைரல் போட்டோஸ்...!
 

நேற்றைய தினம் 'மாஸ்டர்' படத்தின் 50 ஆவது நாளை தளபதி ரசிகர்கள் பிரமாண்டமாக, போஸ்டர் அடித்து... கொண்டாடி வந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, 'மாஸ்டர்' படத்தின் ஷூட்டிங்கின் போது... குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ இதோ...  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!