
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வலிமை. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மற்ற நடிகர், நடிகைகளைப் பற்றியோ, படத்தின் ஷூட்டிங் பற்றியோ எவ்வித அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது.
சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்த தல ரசிகர்கள், பொறுமையிழந்து போனிகபூரை காணவில்லை என போஸ்டர் ஒட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் கூட வலிமை அப்டேட் கேட்டு தல அஜித் ரசிகர்கள் கூச்சலிட்டது சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களை உருவாக்கியது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்பதிலேயே குறியாக உள்ளனர். ஒரு நிலையில் கடுப்பான அஜித் வலிமை பட அப்டேட் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் இன்னும் ரசிகர்கள் பலர், தொடர்ந்து அப்டேட் கேட்டு வரும் நிலையில், படத்தின் இயக்குனர் எச்.வினோத் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். வலிமை மோஷன் போஸ்டர் தயாராகிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் #valimaimotionposter என்கிற ஹேஷ் டாக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.