
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆரம்பத்தில் தடுப்பூசி மீது மக்களுக்கு இருந்த அச்சம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்ற கருத்துக்கள் பரவின. கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகவும், நேற்று காலை பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை போட்டுக்கொண்டார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கும் முற்று புள்ளி வைத்தார் மோடி.
மேலும் செய்திகள்: 'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கரின் மனைவி இவங்களா? முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்!
மேலும் செய்திகள்: ஆக்ஷனில் தெறிக்கவிடும் ஹர்பஜன் சிங்! கொள்ளை அழகில் லாஸ்லியா... வெளியானது 'ப்ரெண்ட்ஷிப்' டீசர்!
மேலும் தற்போது 45 வயதை கடந்த, நடிகர் , நடிகைகள், அரசியல் தலைவர்கள் என வரிசையாக... தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டு, மற்றவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். நேற்றைய தினம் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் அம்மா சாயா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்து கொண்ட நிலையில், தற்போது அவரது சித்தியும், நடிகையுமான ராதிகா, கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.