அனைவரும் ஓட்டு போடணும்! திரையரங்க உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

By manimegalai aFirst Published Apr 17, 2019, 6:25 PM IST
Highlights

நாளை தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 39 மக்களவைத் தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.
 
நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்...  நாளை ஒருநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

நாளை தேர்தல் தினம் என்பதால்,  எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அன்று 'காஞ்சனா 3 ' , 'வெள்ளைப் பூக்கள்',  'மெஹந்தி சர்க்கஸ்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

click me!