’2.0’ஆல் ஏரியா சோல்ட் அவுட்... நூறு கோடி ரூபாய் லாபத்தில் ரிலீஸ் செய்யும் லைகா நிறுவனம்

By vinoth kumarFirst Published Nov 24, 2018, 11:23 AM IST
Highlights

தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர் ஏரியா தவிர ‘2.0’ படத்தின் அனைத்து ஏரியாக்களையும் விற்று முடித்து சுமார் 100 கோடி ரூபாய் லாபத்துடன் படத்தை ரிலீஸ் செய்கிறதாம் லைகா நிறுவனம்.

தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர் ஏரியா தவிர ‘2.0’ படத்தின் அனைத்து ஏரியாக்களையும் விற்று முடித்து சுமார் 100 கோடி ரூபாய் லாபத்துடன் படத்தை ரிலீஸ் செய்கிறதாம் லைகா நிறுவனம்.

ரஜினி நடித்த 2.ஓ படத்தின் வெளிநாட்டு உரிமை, பிற மாநில உரிமைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட அனைத்தும் ஏற்கனவே  விற்பனை ஆகியிருந்த நிலையில்  தமிழக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் வியாபாரம் மட்டும் முடிவடையாமல் இருந்தது.  இது தொடர்பாக ஏற்கெனவே வாய்மொழியாகப் பேசியிருந்தாலும் அவை ஒப்பந்தமாக மாறவில்லை.

நேற்றும் இன்றும் தான் அவை முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

படத்தின் மொத்தச்செலவு 600 கோடி என்று சொல்லப்பட்டாலும் மொத்த பட்ஜெட் 500 கோடிக்கு உள்ளாகவே அடங்கிவிட்டதாம்,  தமிழில் முதல் அதிக பட்ஜெட் படம் என்பதால் ஒவ்வொரு விநியோகப் பகுதிக்கும் இவ்வளவு விலை என்று வைக்கமுடியாது. அப்படி வைத்தால் விலை மிக அதிகமாக இருக்கும். எனவே, ஒவ்வொரு விநியோகப்பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட முன் தொகை வாங்கிக்கொண்டு படத்திக் கொடுப்பதென்று பட நிறுவனம் முடிவு செய்திருக்கிறதாம்.

அதன்படியே தமிழக விநியோகஸ்தர்களிடமிருந்து வந்த முன் தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்டது என்றும் இதுவரை ஆன வியாபாரத்தின் மூலம் லைகா நிறுவனம் 100 கோடி லாபம் சம்பாதித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது,

இப்படத்தின் சென்னை நகர விநியோக உரிமை சத்யம் சினிமாஸ், செங்கல்பட்டு அருள்பதி, வட ஆற்காடு சீனு, தென் ஆற்காடு காளியப்பன், கோவை மதுரை ஆகிய இரு பெரும் பகுதிகளைப் பெற்றிருப்பவர் மதுரை அன்பு, சேலம் செவன் ஜி சிவா, திருநெல்வேலி கன்னியாகுமரி லட்சுமணன்

திருச்சி, தஞ்சை பகுதி மட்டும் புயல் பாதிப்பால் பெரிய வசூல் இருக்காது என்பதால் இன்னும் முடிவாகாமல் இருக்கிறதாம். பெரும்பாலும் அங்கு லைகா நிறுவனமே நேரடியாகக் களமிறங்கலாம் அல்லது சுப்பையா என்பவருக்குக் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

பட ரிலீஸுக்கு இன்னும் 5 தினங்களே இருக்கும் நிலையில், விநியோகஸ்தர்கள் படுமும்முரமாக தியேட்டர்களை புக் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். திங்கள் காலைமுதல் ரிசர்வேஷன் துவங்கப்படும் என்று தெரிகிறது.
 

click me!