ரஜினி பெயரை சொல்லி 15 கோடி மோசடி... இருக்குற பிரச்சனைல இது வேற... புலம்பும் சூப்பர் ஸ்டார்!!

By Narendran SFirst Published Jan 21, 2022, 10:45 PM IST
Highlights

ரஜினியின் பெயரை  பயன்படுத்தி 15 கோடி மோசடி செய்தததாக சென்னை காவல்நிலையத்தில் மலேசியா நிறுவனம் ஒன்று புகார் அளித்துள்ளது. 

ரஜினியின் பெயரை  பயன்படுத்தி 15 கோடி மோசடி செய்தததாக சென்னை காவல்நிலையத்தில் மலேசியா நிறுவனம் ஒன்று புகார் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு அண்மைகாலமாக அடி மேல் அடி விழுந்து வருகிறது. உடல்நிலையில் கோளாறு, நடிக்கும் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காதது என்று மனவேதனையில் இருந்த ரஜினிகாந்துக்கு பேரிடியாக அமைந்தது மகளின் விவாகரத்து விவகாரம். நடிகர் தனுஷும் ரஜினியின் மகள் ஐஸ்வரியாவும் பிரிந்து வாழப்போவதாக தங்களது சமூக வளைதள பக்கங்களில் அறிவித்தனர். இது ரசிகர்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியது. நடிகர் ரஜினிக்கும் அப்படி தான் இருந்திருக்கும். ஏற்கனவே ஒரு மகள் விவாகரத்து செய்த நிலையில் அவருக்கு மறுமனம் செய்துவைத்து சற்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த மகளும் விவாகரத்து செய்தது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

இருக்கின்ற பிரச்சனை சமாளிக்கவே பொதும் பொதும் என்று எண்ணும் நிலையில் ரஜினியின் பெயரை  பயன்படுத்தி 15 கோடி மோசடி செய்தததாக புகார் எழுந்துள்ளது. மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனம் தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருகிறது. கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது. அந்த நிறுவனத்தை அணுகி ரஜினியின் பேட்ட, தனுஷின் நான் ருத்ரன், ராகவா லாரன்ஸின் காஞ்சனா-3 போன்ற படங்களின் பதிப்புரிமை தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளனர். இதற்காக கிட்டத்தட்ட 30 கோடி வரை தொகை கைமாறி உள்ளது. ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆகையால் அந்த நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து அப்போதைக்கு சமாளித்துள்ளார் முரளி.

அதன் பின்னர் காஞ்சனா-3 மற்றும் நான் ருத்ரன் ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்பதும் தங்களை மோசடியாக ஏமாற்றி பணம் பெற்றிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து முரளி ராமசாமியிடம் கேட்ட போது, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாது என அலட்சியமாக பதிலளித்துள்ளார். ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் என்னை மீறி உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது தமிழ் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!